ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திராவிடமாடல் பயிற்சிப்பாசறை, சிறப்புரையாற்ற வருகை தந்திருக்கும் திமுக இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளருமான சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சி மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், ஏ.வந்தேமாதரம் பரணிப்புத்தார் ஊராட்சி திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது: நமது தலைவர் பொதுக்குழுவில் பயிற்சி பாசறை குறித்து வாழ்த்தினார். தற்போது, 234 தொகுதிகளில் 270 பயிற்சி பாசறை நடத்தி உள்ளோம். பயிற்சி பாசறை 2.0 தொடங்க வேண்டும். பிரதமர் மோடி தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்துகிறார். இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார். மோடிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் மு.க.ஸ்டாலின். மோடியின் முகத்திரையை கிழிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக