சென்னை மக்களின் முக்கிய குடிநீர் தேவைக்கான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளது. இந்த ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கும் அளவிற்கு திறன் உள்ளது.

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடிநீர் ஏரிகளில் மொத்தம் 2 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு ஏரிகளில் 10 ஆயிரம் மி.கன. அடி (10 டி.எம்.சி) தண்ணீர் இருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் வாய்ப்பு இருப்பதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக