கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரிமாணவிகளின் நேரடி கள பயிற்சி முகாம்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 ஜனவரி, 2023

கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரிமாணவிகளின் நேரடி கள பயிற்சி முகாம்கள்.


வல்லநாடு கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காககல்லுாரி முதல்வர் தேரடிமணி தலைமை யில், பேராசிரியர் தாமோதரன், இணை பேராசிரியர்கள் செந்தில்நாதன், சபரிநாதன்,  உதவி பேராசிரியர் சுப்புலட்சுமி அவர்களின் அறிவுரைப்படி வாசுதேவநல்லூர் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

வட்டார உதவி வேளாண் இயக்குநர் இளஞ்செழியன், வேளாண் அலுவலர் கௌசல்யா தலைமையில், உதவி வேளாண் அலுவலர் சங்கீதா முன்னிலையில்  வாசுதேவநல்லூர் அருகே தேவிபட்டினம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உழவன்‌ செயலி பற்றிய விழிப்புணர்வை மாணவிகள் ஜெயந்தி, கல்பனா வழங்கினர்.




வல்லநாடு கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காககல்லுாரி முதல்வர் தேரடிமணி தலைமையில், பேராசிரியர் தாமோதரன், இணை பேராசிரியர்கள் செந்தில்நாதன், சபரிநாதன்,  உதவி பேராசிரியை சுப்புலட்சுமி அவர்களின் அறிவுரைப்படி வாசுதேவநல்லூர் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

வட்டார உதவி வேளாண் இயக்குநர் இளஞ்செழியன், வேளாண் அலுவலர் கௌசல்யா, உதவி வேளாண் அலுவலர் ஷாஹுல் ஹமீது அவர்களின் முன்னிலையில்  வாசுதேவநல்லூர் அருகே சங்கனாபேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உழவன்‌ செயலி பற்றிய விழிப்புணர்வை மாணவிகள் ஹரிணிஸ்ரீ , திவ்யா, கனிஷ்கா வழங்கினர். இதை தொடர்ந்து மாணவிகள் உழவன் செயலி பற்றிய துண்டு பிரசுரங்களைக் கொடுத்தனர்.




வல்லநாடு கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காககல்லுாரி முதல்வர் தேரடிமணி தலைமை யில், பேராசிரியர் தாமோதரன்,  இணை பேராசிரியர்கள் செந்தில்நாதன்,  சபரிநாதன், உதவி பேராசிரியை சுப்புலட்சுமி அவர்களின் அறிவுரைப்படி வாசுதேவநல்லூர் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

வட்டார உதவி வேளாண் இயக்குநர் இளஞ்செழியன், வேளாண் அலுவலர் கௌசல்யா அவர்களின் தலைமையில் உதவி தோட்டக்கலை அலுவலர் குணா முன்னிலையில்  வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உழவன் செயலி பற்றிய விழிப்புணர்வை மாணவிகள் ஐஸ்வர்யா, தீபிகா, ஹரிப்பிரியா  வழங்கினர். இதை தொடர்ந்து மாணவிகள் தென்னை சாகுபடி பற்றிய துண்டு பிரசுரங்களைக் கொடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/