செந்தமிழ் வேதமாகிய திருமுறைகளின் பெருமை பற்றி முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச. நடராஜன் பேட்டி
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் த தெய்வத்தமிழிசை அறிஞர் முனைவர் சிவி.ச , நடராஜன்நிருபர்களுக்கு பேசியதாவது:-
செந்தமிழ் வேதமாகிய திருமுறைகளின் பெருமை. சிதம்பர தல தனிப்பாடலும், அதன் விளக்கமும். திருமுறையே சைவநெறிக் கருவூலம், தென்தமிழின் தேன்பாகு ஆகும், திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான் செவிமடுத்த செந்தமிழ் வேதம், திருமுறையே நடராசன் கரம் வருந்த எழுதியருள் தெய்வ நூலாம், திருமுறையே சொக்கேசன் மதிமலி வாய்மலர்ந்து அருளும் சிறப்புற்றாமால்.
இதன் தெளிவுரை. செந்தமிழ் திருமுறைகள் தான் சைவ சமயத்தின் கருவாக திகழ்வது. தென்னாட்டுத் தமிழின் தேனின் சுவையைவிட இனிமையானது. கயிலையில் இருந்து கொண்டு பரம்பொருள் சிவபெருமான் செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கும் செந்தமிழ் வேதமானது நமது திருமுறைகளே ஆகும்.
தில்லை ஞானக்கூத்தனாகிய நடராசப் பெருமான் தன் பொற்கரம் வருந்த எழுதிய தெய்வ ஞானநூல் செந்தமிழாகிய திருவாசகம் ஆகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆலவாய் அண்ணலாகிய மதுரை சொக்கநாதப் பெருமானே, தமிழ் புலவன் பாணபத்திரன் வறுமையால் வாடுவதை கருதியும், அவனுடைய செந்தமிழை தான் பருக வேண்டியும், சேரமான் பெருமாள் நாயனாரிடம், "திருமுகப் பாசுரம்" என்ற கடிதவரைவு ஒன்றை செந்தமிழால் வடித்து, தமிழ் வறுமையால் வாடக்கூடாது எனக்கருதி, பாண பத்திரனுக்குவேண்டிய பொன் பொருள்களை எல்லாம் கொடுத்து, அவனை அழைத்துவா! என்று இறைவனே தூது அனுப்புகிறார். இப்படிப்பட்ட அளவிலா பெருமை உடையதே நமது இறைமொழியாம் தமிழ்மொழி என்பது. என அவர் பேசினர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக