கிள்ளிகுள வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் வெள்ளை ஈக்கு எதிராக கண்ணாடி இறக்கை இறைவிழுங்கி (Chrysoperla carnea) என்னும் ஒட்டு பூச்சியை அறிமுகம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 ஜனவரி, 2023

கிள்ளிகுள வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் வெள்ளை ஈக்கு எதிராக கண்ணாடி இறக்கை இறைவிழுங்கி (Chrysoperla carnea) என்னும் ஒட்டு பூச்சியை அறிமுகம்.


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிகுளத்தில்‌ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக கிராமப்புற வேளாண் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். 


கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமையில், பேராசிரியர்கள் தாமோதரன் மற்றும்  செந்தில்நாதன்,‌இணை பேராசிரியர்கள் சபரிநாதன், சுப்புலட்சுமி, வட்டார இணை வேளாண் இயக்குநர் இளஞ்செழியன், வேளாண் அலுவலர் கவுசல்யா, உதவி வேளாண் அலுவலர் ஷாஹுல் ஹமீத் மற்றும் உதவி வேளாண் அலுவலர் அரவிந்த் அவர்களின் ஆலோசனையின்படி வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் இராமநாதபுரம் கிராமத்தில் உள்ள கனகராஜ் என்பவரின் தென்னந் தோப்பில் வெள்ளை ஈக்கு எதிராக கண்ணாடி இறக்கை இறைவிழுங்கி (Chrysoperla carnea) என்னும் ஒட்டு பூச்சியை அறிமுகம் செய்தார்கள். இதைத் தொடர்ந்து ரசாயன பூச்சிக் கொல்லிகளை குறைந்த அளவில் பயன்படுத்துமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


மேலும் இந்த இயற்கை முறையின் சிறப்பம்சங்களை துண்டு பிரசுரங்களைக் கொடுத்து மாணவிகள் ஐஸ்வர்யா, தீபிகா, திவ்யா, ஹரிப்பிரியா,  ஹரிணிஸ்ரீ, ஜெயந்தி, கல்பனா, கனிஷ்கா ஆகியோர் விளக்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/