எஸ் ஆர் எம் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசயிகளுடன் நேரடி கலந்தாய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 ஜனவரி, 2023

எஸ் ஆர் எம் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசயிகளுடன் நேரடி கலந்தாய்வு.


அச்சரப்பாக்கம் எஸ் ஆர் எம் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் விதை நேர்த்தி அசோஸ்பைரில்லம், ரைசோபியம், கால்நடை தீவனம், உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.



செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள எஸ்ஆர்எம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் வேளாண்மை துறையில் இளம் அறிவியல் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள் ஆ.லின்சாராணி, ச.குணாலினி ஜி.சமிதா, ஐ.பூஜ ஸ்ரீ, செ.ஹரிணி, வே.ஆர்த்தி சி.மானஷா, ச.சௌமியா ஜெ.ஜெயபாரதி ஆகிய மாணவிகள் வேடந்தாங்கல் ஊராட்சியில் மூன்று மாதங்கள் தங்கி வேளாண் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 



வேடந்தாங்கல் ஊராட்சியில் உள்ள சித்திரக்கூடம் கிராம விவசாயிகளுடன் தங்கள் பயின்ற அனுபவங்களை குறிப்பாக விதை நேர்த்தி அசோஸ்பைரில்லம், ரைசோபியம், கால்நடை தீவனம், பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம், உலர்தீவனம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுடன் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர் இதற்கான ஏற்பாட்டினை எஸ் ஆர் எம் கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/