தஞ்சையில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கடந்த காலத்தைப் போல் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்க கோரி.:சிஐடியு ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தஞ்சையில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கடந்த காலத்தைப் போல் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்க கோரி.:சிஐடியு ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கடந்த காலத்தைப் போல் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்க கோரி.:சிஐடியு ஆர்ப்பாட்டம்.


தஞ்சாவூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கியது போல் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும், விசாரணை என்ற பெயரில் ஓய்வூதியர்களை மிரட்டுவதை தடுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயில்வேயில் இன்று மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இதற்கு மாவட்ட தலைவர் சின்னையன் தலைமை தாங்கினார். சி.டபிள்யூ.எப்.ஐ மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொருளாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஜெயபால் , மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் பேரிநீதிஆழ்வார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  இதில் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜூ, ராஜாராமன், முருகேசன், அன்பு, வீரையன், பாலமுருகன், ராஜா, மில்லர் பிரபு, பவானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad