மகாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்263- வது பிறந்தநாள் விழா: தஞ்சையில் கோலாகல கொண்டாட்டம்.
தஞ்சாவூர் ஜனவரி -3ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்தநாளான இன்று 3-ந்தேதி காலை 8.00 மணியளவில் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர்சந்தை அருகில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருஉருவ படத்துக்கு தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அருணா அஜிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாநில கொள்கை பரப்பு செயலாளர் டென்னீஸ் , மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் லயன்.தூதர். டாக்டர். இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ், தஞ்சை மாவட்ட ஆலோசகர் ஆரோக்கியசாமி, தஞ்சை மாவட்ட பொருப்பாளர் லோகநாதன், தஞ்சை மாவட்ட தகவல் தகவல் தொழில்நுட்ப செயலாளர் குனா, பூதலுர் ஒன்றிய செயலாளர் அஜய் உள்பட பலர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக