தஞ்சை உழவர் சந்தையில் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தஞ்சை உழவர் சந்தையில் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர்

தஞ்சை உழவர் சந்தையில் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர்


தஞ்சாவூர் ஜனவரி 3 திருவையாறு மற்றும் பூதலூர் வட்டாரத்தைச் சேர்ந்த ஆர்.வி.எஸ். வேளாண் கல்லூரி மாணவிகள் தஞ்சையில் உள்ள உழவர்சந்தைக்குச் சென்று வேளாண் அலுவலர் செ.ஜெய்ஜி பால் அவரிடம் உழவர் சந்தையின் செயல்பாடுகள் , விவசாயிகள் பதிவு செய்தல்,விலை நிர்ணயம் செய்தல், நுகர்வோர் பயன்கள் வியாபாரங்கள் பற்றியும் விலை நிர்ணயம் மற்றும் உழவர் உற்பத்தி யாளர்  நிறுவன கடைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடைகள் , இயற்கை வேளாண் அங்காடிகள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.

தஞ்சாவூர் உழவர் சந்தை யில் 7.10லட்சம் மதிப்பு உள்ள 17.98 டன் காய்கறிகள், பழங்கள் 65 விவசாயிகள் முலம் விற்பனை செய்ய பட்டு 2766 நுகர்வோர்கள் பயன் பெற்றனர் மேலும் இங்குள்ள இயற்கை விவசாயியுடன் சேர்ந்து நுகர்வோர் க்கு முருங்கை இலைச்சாறு வழங்கினர்.மேலும் காய்கறிகள் கழிவு களை மக்கவைக்கும் இயந்திரம் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொண்டனர் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad