தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அன்னதான இல்லத்தில் லயன் கிளப் அக்ரோ சிட்டி, தமிழரின் விவசாய தலைமை சங்கம் இணைந்து நடத்தும் இந்த வருட புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய அன்னதானம் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது வள்ளலார் திருவுருவத்திற்கு மலர் தூவி தீபம் காட்டி வழிபாடு நடைபெற்றது.
இதில் லயன். தூதர். டாக்டர். இரா.பிரனேஷ், தஞ்சாவூர் லயன்ஸ் அக்ரோ சிட்டி ஜி எம் டி/பிஆர் ஓ , தமிழரின் தலைமை விவசாயிகள் சங்க மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் இன்பென்ட் ராஜ், தஞ்சாவூர் அக்ரோ சிட்டி நிர்வாகிகள் தலைவர் லயன்.டாக்டர்.இ.கார்திகேயன் மண்டல தலைவர் 10 லயன்.சிவக்குமார் மண்டல ஒருங்கிணைப்பாளர் லயன்.குருநாதன், மண்டல பொறுப்பாளர் லயன்.இளங்கோவன், மற்றும் தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அருணா அஜிஸ் , பொறுப்பாளர்கள் லோகநாதன் , ராஜ்குமார் , குனா , டென்னீஸ் , மற்றும் நிர்வாகிகள் , சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் நூற்றுக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக