தமிழ்நாடு கனிம வள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர் நல சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 மார்ச், 2023

தமிழ்நாடு கனிம வள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர் நல சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு கனிம வள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர் நல சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழா. 



இ.சி.ஆர் சாலை வடநெம்மேலியில் உள்ள பீச் ரிசார்ட்டில் சங்கத் தலைவர் திரு ஐ. கே.எஸ் நாராயணன் அவர்களது தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. சங்க பொருளாளர் மற்றும் திருப்போரூர் தகவல் தொழில்நுட்ப அணி  ஒருங்கிணைப்பாளர் திரு. எக்ஸ்பிரஸ் எல்லப்பன் வரவேற்புரை ஆற்றினார். 


சிறப்பு விருந்தினராக தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் திரு. பொன்குமார் அவர்களும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.எஸ்.பாலாஜி அவர்களும், திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ் ஆர் எல். இதய வர்மன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் பொறி.S.ஜெகதீசன் மற்றும் மணல் லாரி சங்க தலைவர் திரு யுவராஜ், திரு. பன்னீர்செல்வம்,காஞ்சி தீனன், திரு.ஜெயராமன், திரு ஆர்.வெங்கடேசன்,  திரு.அபிஷேக் ராஜேஷ், திரு. வி.என் கண்ணன் மற்றும் பல்வேறு சங்கங்களை சார்ந்த தலைவர் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 


சங்க துணைத் தலைவர்கள் திரு.டி கார்த்திக், திரு.கே. அன்பு,  திரு லட்சுமணன், திரு. சுந்தரம், கணேசன்,  நாகப்பன் மற்றும் சங்க கௌரவ தலைவர் திரு வி நந்தகோபால் அவர்களும், துணைச் செயலாளர்கள் திரு.ஏழுமலை, திரு.வசந்த், திரு.கிருபானந்தன், திரு.தமிழ்ச்செல்வன், திரு.போஸ், திரு.கே.எஸ்.என்.நேதாஜி, திரு.தாமோதரன் திரு.செந்தில்குமார் மற்றும் பகுதி செயலாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, தாமஸ், செந்தில்குமார், எஸ் எஸ் .ராமச்சந்திரன், நந்தகுமார் ,புஷ்பராஜ், பெருமாள், தக்ஷிணாமூர்த்தி, முத்துராஜ், கோடீஸ்வரன், ராஜாராம், சுகுமார் ரமேஷ், சுரேஷ் ராமராஜ் உறுப்பினர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்‌ இறுதியாக சங்கத்தின் செயலாளர் திரு.எம்.சாமிநாதன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். 


இவ்விழாவில்  ஓவர் லோடு முறைப்படுத்துவது குறித்தும், மணல் குவாரிகள் திறக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறைந்த சங்க கௌரவ தலைவர் திரு.நந்தகோபால்  அவரது திருவுருவ படம் திறந்து அவரது குடும்பத்தாருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/