இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை கட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (SRMIST) நடைபெற்றது.ஆஸ்திரேலியா நாட்டின் லா ட்ரோபெ பல்கலைக்கழக தலைவர் மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் கின்லே தீவார் மற்றும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து எஸ்ஆர்எம் ல் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் பொறியியல் உயர் நிலை மையத்தினை லா ட்ரோபெ பல்கலைக்கழக தலைவர் மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் கின்லே தீவார் மற்றும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி மையத்தினை திறந்து வைத்தனார்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜான் கின்லே தீவார் பேசுகையில் : இங்கு நாங்கள் வருகை செய்துள்ளது ஆஸ்திரேலியா இந்தியா நாடுகளிடையே உறவுகளை விரிவுபடுத்தவும், வலுபடுத்தவுமே ஆகும்.எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் இந்திய நாட்டில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு பொறியியல், மருத்துவம், மேலாண்மை, அறிவியல் மற்றும் கலையியல் புலம் உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி கல்வி வழங்குவது சிறப்பு பெற்றுள்ளது.
நாங்கள் செய்துள்ள ஒப்பந்தம் மூலம் இந்த இரு நிறுவனங்களின் மாணவர்கள், பேராசிரியர்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடவும், இந்திய மாணவர்கள் எங்கள் பல்கலையில் செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி, ஐ ஓ டி ஆகியவற்றில் குறுகிய கால படிப்பு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனை செய்துகொள்ள உள்ளோம் என்றார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இரு கல்வி நிறுவனங்களிடையே புதிய ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாக்கியுள்ளதாக எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் பேசுகையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ட்ரோபெ பல்கலைக்கழக உதவி துணைவேந்தர் முனைவர் இஷ்டக்சி பாரவே, இணை துணைவேந்தர் பேராசிரியர் அமலியா டி லோரியோ, எஸ்ஆர்எம் பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி, பன்னாட்டு உறவுகள் இயக்குனர் பேராசிரியர் லட்சுமி நரசிம்மன் மற்றும் உதவி இயக்குனர் பேராசிரியர் கயல்விழி ஜெயவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக