கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர்வதற்கு கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) முதல்வர் முனைவர் செ.அலெக்ஸான்டர் அவர்கள் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தி குறிப்பில் 2023 24 ஆம் கல்வியாண்டில் இளங்கலை பாடப்பிரிவில் சேர்வதற்கு www.tngsa.in என்ற இணையதளம் மூலம் மே 8ம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் மேலும் கரூர் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம்.
மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இம்மையத்தை அணுகி உரிய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் முனைவர் அலெக்சாண்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக