அழகிய அந்தமானில் அருந்தமிழ் மாநாடு மற்றும் கருத்தரங்கம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 31 மே, 2023

அழகிய அந்தமானில் அருந்தமிழ் மாநாடு மற்றும் கருத்தரங்கம்.


அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் புதுவை மற்றும் கடலூர் கிளையும் அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து 'பனுவல்களில் விழுமியங்கள்' என்னும் மையப் பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மிக சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்கில் பல்வேறு அறிஞர்களின் ஆய்வு கட்டுரைகள் நூலாக வெளியிட்டனர்.ஆய்வுகோவையை அந்தமான்  தமிழர் சங்கத் தலைவர் வி.  மூர்த்தி  வெளியிட சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் மு. சற்குணம் பெற்றுக்கொண்டார். 


முதல் பிரதியை உதயா ட்ராவல்ஸ் உரிமையாளர்  பிரகாஷ் பெற்றுக் கொண்டார், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் கோ. பெரியண்ணன் தலைப்புரையாற்றினார். செயலாளர் கோட்டை காளிதாசன், உதவி தலைவர் எ. தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். முனைவர் சொ. ஏழுமலை வரவேற்புரை வழங்க, முனைவர் க. கண்ணன் அறிமுகவுரையும் முனைவர் இராமானுஜம் தொடக்க உரையாற்றினார். அறிமா கே. பி. பத்மநாபன், முனைவர் ந. கருணாநிதி, கவிஞர் ம.க சுப்பிரமணியன் முனைவர் அ. இராசேந்திரன், சென்னை பல்கலைக்கழக சம்பத்குமார், பேராசிரியர் தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் கோ. குணசேகர் நன்றியுரையாற்றினார். பேராசிரியர் கண்ணன் நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.


இராமானுஜம் அந்தமான் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியை பாராட்டினார். பெரியண்ணன் தமிழின் பெருமை பற்றி தொகுத்துரைத்தார். உதயா டிராவல்ஸ் பிரகாஷ் அந்தமானில் கருத்தரங்கம் நடைபெறவும் சுற்றுலாவிற்கும் பெரிதும் உதவி புரிந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கருத்தரங்கம் தமிழ் மொழி வாழ்த்துடன் நிறைவு பெற்றது. வீர மண் அந்தமானில் கருத்தரங்கம் நடைபெற்றதை மகிழ்வுடன் அனைவரும் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/