மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயில் உலக சிலைகள் செப்பேடுகள் கண்டுபிடிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 மே, 2023

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயில் உலக சிலைகள் செப்பேடுகள் கண்டுபிடிப்பு.


மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பள்ளம் தோண்டும்போது 23 உலோக சிலை மற்றும் 493 செப்பேடு மற்றும் பூஜை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.



தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் சூழலில், கும்பாபிஷேகத்தை காண்பதற்காகவும் மக்களுக்கு அருள் பாலிக்கவும் பூமியில் இருந்த சிலைகள் வெளியே வந்திருப்பதாகவும் ஆனால் சுவாமி சிலைகள் அனைத்தையும் தொல்வியல் துறை  எடுத்துச் செல்வது என்பது நியாயம் இல்லை என்றும் மேலும்  அத்தனை சிலைகளும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மண்ணில் இருந்து எடுக்கப்பட்டது, ஆகையால் இவை அனைத்தும் தருமபுரம் ஆதீனத்திற்கே சொந்தமானதாகும்.


மேலும் தருமபுர ஆதீனத்தில் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே இந்த அனைத்து சிலைகளுக்கும் பூஜைகளும் பராமரிப்பதும் நன்றாக இருக்கும் தொல்லியல் துறை எடுத்துச் சென்றால் அருங்காட்சியத்தில் வைப்பார்கள் அல்லது சிலை பாதுகாப்பு மையத்தில் வைப்பார்களே தவிர அதற்கு பூஜைகளும் பராமரிப்பும் சரியாக இருக்காது, ஆகையால் இவை அனைத்தும் தருமபுர ஆதீனத்தில் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே சிறந்ததாகும் இதுவே பக்தர்களின் கோரிக்கையும் ஆகும்.


கிடைக்கப்பட்ட அனைத்து பொக்கிஷங்களையும் வரலாற்றை எடுத்துச் சொல்வதற்கு தொல்லியல் துறை தருமபுரம் ஆதீனத்தில் இடத்திற்கு சென்று அதனை ஆராய்ந்து மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எடுத்துச் செல்வது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.


தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து  அனைத்து விக்கிரகங்களும், பூஜை பொருட்கள், செப்பு தகடுகள் தருமபுர ஆதீனத்தின் இடத்திலேயே பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு இதனை வரலாற்றை மக்களுக்கு தெரிவிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா சார்பில் கேட்டுக் கொண்டனர்.


தவறும் பட்சத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/