JACKHI உலக சாதனை நிறுவனத்தின் உலக சாதனையாளர் புத்தக வெளியீட்டு விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 மே, 2023

JACKHI உலக சாதனை நிறுவனத்தின் உலக சாதனையாளர் புத்தக வெளியீட்டு விழா


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் JACKHI உலக சாதனை நிறுவனத்தின்,  உலக சாதனையாளர் புத்தக வெளியீட்டு விழா வைத்தீஸ்வரன் கோயில் சதாபிஷேகம் ஹோட்டலில் நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு JACKHI உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் J.Jacob Gnanaselvan தலைமை ஏற்க, ஜெர்மனியை சேர்ந்த,  நாட்டியஸ்வராலயா நடனபள்ளியின் இயக்குனர் Dr.R.Suganthi raveendranath, தென்னிந்திய திரைப்பட திருப்பூர் கூத்துப்பட்டறை சங்க தலைவர் Amb.Dr.Vinothramkumar, அன்பின் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் செல்வம் உமா, தேவார இசை கலைமணி R.Akila, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் Muraleetharan ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 


விழாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு தனிநபர் உலக சாதனை படைத்த 119 பேர், 15 குழு உலக சாதனைகள் ,12 வெகுஜன உலக சாதனைகள் அடங்கிய புத்தக தொகுப்பு வெளியிட பட்டது. 14 புதிய உலக சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 


மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கான Golden Icon விருது, சாதனை குழந்தைகளுக்கான Kid super star விருது, இண்டர்நேஷனல் பெண் சாதனையாளர் விருது ஆகியவை 121 நபர்களுக்கு மேடையில் வழங்கப்பட்டது. 


இவற்றோடு தனிநபர் திறமையை மேடையில் வெளிப்படுத்தும் Talentina 2023 நிகழ்வில் 45 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். விழாவில் Jackhi உலக சாதனை நிறுவனத்தின் மேலாளர் B.SRINIVASAN, CEO Esther, President Preya Sureshkumar, கவிஞர் ஹரிஉமா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை Praisy மற்றும் கல்பனா தொகுத்து வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/