காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கர்நாடகா தேர்தல் பொறுப்பாளருமான மாங்குடி அவர்கள் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடத்தினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கர்நாடகா தேர்தல் பொறுப்பாளருமான மாங்குடி அவர்கள் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.


கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில் கிருஷ்ணராஜ்பேட் தொகுதியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் பிரச்சாரத்திற்கு வருகை தர உள்ளார்கள். இந்நிலையில் கிருஷ்ணராஜ் பெட் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக பொறுப்பேற்றிருக்கும்  காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு மாங்குடி அவர்கள் கிருஷ்ணராஜ் பெட் தொகுதியின் பூத் கமிட்டி பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். 


உடன் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு பிரவீன் குமார் அவர்களும் பங்கேற்றார். மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சந்திரசேகர், பி. பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர் பி.எல். தேவராஜ், விஜயராமகுடா, எம்.டி. கிருஷ்ணமூர்த்தி, பிளாக் தலைவர் நாகேந்திர குமார், கெகேரி சுரேஷ், இளைஞர் காங்கிரஸ் செய்தான், மகேந்திரா, பிளாக் தலைவர் மகிலா காங்கிரஸ் பிரதீபா லோலாக்சி ஆகியோர் உற்சாகமாக கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/