உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 500 மாணவர்கள் அணிவகுத்து பிளாஸ்டிக் தடை சின்னம் உருவாக்கி சர்வதேச சாதனை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜூன், 2023

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 500 மாணவர்கள் அணிவகுத்து பிளாஸ்டிக் தடை சின்னம் உருவாக்கி சர்வதேச சாதனை.


ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார்  ஆலோசனையின் படி 500 மாணவர்கள் அணிவகுத்து பிளாஸ்டிக் தடை சின்னம் உருவாக்கி சர்வதேச சாதனை படைத்தனர். 


30 நிமிடம் அரங்கேறிய இந்த பிளாஸ்டிக் தடை சின்ன உருவாக்க சர்வதேச சாதனைக்கான சான்றிதழ் மற்றும் விருதானது சர்வதேச ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவனத்திடம் இருந்து  துறையின் இயக்குனர் பொறுப்பு திஆன்ட்ரூ ஜான் அவர்களிடம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவனத்தின் தீர்ப்பாளர் சதீஷ் குமார், கலை இளமணி டாக்டர் ஜே அரவிந்த் குமார், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு கமிட்டியின் உறுப்பினர் செயலாளர் டாக்டர் என் ரமேஷ், செல்வி ஹெலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

ஆன்ட்ரூ ஜான்  சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் டாக்டர் என் ரமேஷ் மற்றும்  மாவட்ட செயல் அலுவலர் ஹெலன் ஆகியோர் பேசினார்கள், இந்நிகழ்ச்சியில் கல்லூரிகளுக்கு இடையேயான நடனம், ரங்கோலி ,மாதிரி படைப்புகள் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி  சந்துரு,  குளோரிமெர்லின், சந்தோஷ், சிவசங்கரி ஆகியோர் செய்திருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad