ஆஸ்மோசிஸ் என்ற காட்சிப்படுத்துதல் கற்றல் தளத்தை வழங்கும் எல்ஸீவர் நிறுவனத்துடன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை இந்தியாவிலேயே முதல் முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஜூன், 2023

ஆஸ்மோசிஸ் என்ற காட்சிப்படுத்துதல் கற்றல் தளத்தை வழங்கும் எல்ஸீவர் நிறுவனத்துடன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை இந்தியாவிலேயே முதல் முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தம்.


விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள  அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆஸ்மோஸிஸ் என்ற 3டி காட்சிப்படுத்துதல் கற்றல் தளத்தை வழங்கும் எல் ஸீவர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 


இந்தியாவிலேயே இரண்டாவது நிறுவனமாகவும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளிலேயே முதல் முறையாகவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இது குறித்து துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார்  கூறியதாவது ஆஸ்மோசீஸ் எல்ஸுவர் என்பது புதுமையான டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ கல்வியை காட்சிப்படுத்துதல் கற்றல் தளமாக வழங்கும் அமைப்பாகும் மருத்துவம் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த மாணவர்களுக்கு புத்தக கல்வியை காட்டிலும் 3டி காட்சிப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியமானது. அதனை மையமாகக் கொண்டு எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இதன்மூலம் மாணவர்கள் பல்வேறு கடினமான மருத்துவ தலைப்புகளை எளிமையாக விளக்கப்பட காட்சியுடன் கற்க முடியும். அவர்களின் கல்வி அடிப்படையிலான திறனும் மேம்படும் என்றார்.


இந்த ஒப்பந்தத்தில் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் எல்சீவர் நிறுவனத்தின் நிதி இயக்குனர் . சீஸர் ஆகியோர் கையெழுத்திட்டனர் இதற்கான அனைத்து ஏற்பாட்டினையும் துறையின் பேராசிரியை தமிழ்ச்சுடர் மற்றும் எல்ஸுவர் நிறுவனத்தின் மேலாளர்கள்  அபிஷேக் குப்தா ,அமீர் ஹுசைன் மற்றும் ஆலோசகர் நிஷா ஆகியோர் செய்திருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad