நகராட்சி மூலம் நடக்க இருக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 ஜூலை, 2023

நகராட்சி மூலம் நடக்க இருக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி.


புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சியால் செயல்படாமல் இருக்கும் தொகுதியின் வளர்ச்சி பணிகள் சம்பந்தமாக  உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம் ஆகியோரை அலுவலகம் வரவழைத்து வளர்ச்சி பணிகள் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்.


இந்த சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் குபேர் மண்டபம் நவீன முறையில் சீரமைப்பு, அறப்பணி அவ்வைத் தோட்டத்தில் கல்யாண மண்டபம், தாவீது பேட் நகராட்சி அரசு குடியிருப்பை புதுப்பித்தல், எல்லையம்மன் கோயில் சமுதாய கூடத்தை ஒழுங்குபடுத்துதல், தமிழ் தாய் நகர் புற குளம் மீதமுள்ள வேலையை விரைந்து செய்து முடித்தல், அறப்பணி அவ்வை தோட்டம், நடுத்தெரு, பிரான்சுவா தோப்பு, காளியம்மன் தோப்பு, நேதாஜி நகர் 2 ஆகிய பகுதிகளில் உள்ள பழைய நகராட்சி கழிவறையை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக அங்கன்வாடி, பாடசாலை, நூலகம் போன்றவற்றை அமைத்தல், இயங்காமல் இருக்கும் சின்ன மணிக் கூண்டு பழமை மாறாமல் சரி செய்து கொடுத்தல், சி.எம் அஷ்ரப் பூங்கா பயன்பாட்டிற்கு இல்லாமல் இருப்பதினால் அங்கு இரண்டு அங்கன்வாடி அமைத்துக் கொடுத்தல், மேலும் முக்கியமாக நின்று போன கழிவறை கட்டுவதற்காக நிதி உதவிகான திட்டங்கள் ஆகியவை சம்பந்தமாக சிறப்பு ஆலோசனைகள் நடைபெற்றது.


ஆலோசனை கூட்டத்தில் தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, கிளைச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சகோதரர்கள், நகராட்சி அதிகாரிகள்  ஆகியோர் உடன் இருந்தனர், மேலும் தற்போது சில தினங்களிலே நேதாஜி நகர் 3 சாலை மற்றும் வாய்க்கால் சீரமைத்தல் பணி தொடங்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டது. ஆய்வின் போது அதிகாரிகள் சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி யிடம் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/