தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்ந்தன, குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் சாலை, புஸ்சி வீதி, மிஷன் வீதி, எல்லையம்மன் கோயில் வீதி, கோலஸ் நகர், ஏனம் வெங்கடாசலபதி வீதி, முல்லா வீதி, காஜீயார் வீதி உள்ளிட்ட தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன.
புதுச்சேரியை பொறுத்தவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்துள்ளன, சாலையில் விழுந்துள்ள மரங்களை பொதுப்பணி துறை, நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி முயற்சியினால் போர்கால அடிப்படையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடம் கூறியதாவது, சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகளை ஈடுபடுத்தி சரி செய்து கொண்டு வருகிறோம், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தால் அலைபேசியில் தெரிவியுங்கள் அதை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக