புதுச்சேரி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 ஜூலை, 2023

புதுச்சேரி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர்கள்.


புதுச்சேரி மாநிலம் நேதாஜி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான பெத்தாங்கு விளையாட்டுப்போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது, இதில் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர்  பாஸ்கர்(எ) தர்ஷனாமூர்த்தி முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றி தேசிய பாடலுக்குப்பின் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி போட்டியை வட்டத்திலிருந்து காய் போட்டு துவங்கி வைத்தார்.


இருவரும் சிறிது நேரம் விளையாடினார்கள், அவர்களை சுற்றி இருந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்டத்தை துவக்கி வைக்கும் போது கைகளை தட்டி கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர், அதனைத் தொடர்ந்து விளையாடும் விளையாட்டு வீரர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் பாராட்டினர், உடன் நேதாஜி நகர் 3 பெரியபாளையத்தம்மன் கோயில் நிர்வாகிகள் மற்றும் நேதாஜி நகர் 3 நேதாஜி விளையாட்டு கழக வீரர்கள், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, திமுக வை சேர்ந்த நேதாஜி நகர் 3 கிளைச் செயலாளர் காத்தலிங்கம், நேதாஜி நகர் 2 கிளைச் செயலாளர் ராகேஷ், கழக சகோதரர்கள் செழியன், மோகன், பாலாஜி, இசை, பிரதீப், ராஜ், முத்து, வசந்த் அனைவரும் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad