பக்ரீத் பண்டிகையையொட்டி நலத்திட்டங்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜூன், 2023

பக்ரீத் பண்டிகையையொட்டி நலத்திட்டங்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி.


புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட முல்லா வீதியில் உள்ள சமுதாயக்கூடத்தில் 800க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு  திமுக அயலக அணி அஷ்ரப் ஏற்பாட்டின் பேரில் புதுச்சேரி மாநில திமுக துணை அமைப்பாளரும் உப்பளம்  சட்டமன்ற உறுப்பினருமான அனிபால் கென்னடி உணவுகளை வழங்கினார்.


பின்னர் தொகுதியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது, இந் நிகழ்ச்சியில் ஈரம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ராஜேந்திரன் உப்பளம்  சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி செய்து வரும் மக்கள் தொண்டுக்காகவும் சமூக சேவைக்காகவும் சால்வை அணிவித்து பாராட்டினை தெரிவித்தார்.

உடன் துணை தொகுதி செயலாளர் நாசர், திமுக பிரமுகர் நோயல், மாநில மாணவரணி நிசார், அன்வர், பாபு, ரக்கிப், இமாம், சிராஜ், ஜாகீர், தஸ்தகீர் கிளை செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad