உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வாழ்த்துரை வழங்கி பேசுகையில் கடல் அரிப்பு ஏற்படாமல் இருக்க என் தொகுதியில் கற்களை கொட்டித் தாருங்கள் மேலும் பழைய துறைமுகம் உடைந்த பொழுதே முதலமைச்சரும், துணைநிலை ஆளுநர் பார்வையிட்டு அதை விரைவில் கட்டுவதற்கான பணியை மேற்கொள்கிறோம் என்று உறுதி அளித்தார்கள் ஆகையினால் அதனை விரைந்து செய்து கொடுக்கும்படி சுட்டிக் காட்டினார்.
மேலும் மாண்புமிகு மக்கள் முதல்வர் அனைத்தையும் செய்து கொண்டு தான் வருகிறார் ஆயினும் அவருக்கு முழு அதிகாரம் கிடைக்கும் வகையிலே அவர் மென்மேலும் மக்களுக்கு பணி செய்வார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். துணைநிலை ஆளுநர் அவர்கள் பேசுகையில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டிய அனைத்து பணிகளும் தாமதமாவதற்கு காரணம் அப்பணியை மென்மேலும் சிறப்பாக செய்ய திட்டமிட்டு கொண்டிருக்கிறோம் ஆகையால் தான் தாமதம் ஆகிறது.
விரைவில் சிறப்பாக செய்து கொடுக்கிறோம் என்று உறுதி அளித்தார் நிகழ்ச்சியில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக