புதுச்சேரி மாநிலம் உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி இரயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜூன், 2023

புதுச்சேரி மாநிலம் உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி இரயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை.


புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை சாலை மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை கடந்து போகும் ரயில்வே லைன் 46 மற்றும் 47 ஆகியவற்றில் பொதுமக்கள் கடந்து போகும் சாலைகள் குண்டும் குழியுமாக உடைந்த நிலையில் உள்ளது ஆகையினால் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உமாபதி உதவி பொறியாளர் பார்த்தசாரதி ஆகியோருடன்  புதுச்சேரி ரயில்வே நிலையம் சென்று அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டரை சந்தித்து ஆலோசனை நடத்தி கோரிக்கைகள் வைத்தார்.


புதுவையில் முக்கியமான கிராஸ் லைன் ஆகிய 46 மற்றும் 47 வாணரப்பேட்டை மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலையில் கடந்து செல்லும் ரயில்வே லைன் மிகவும் முக்கியமான இடங்கள் பொதுமக்கள் பெரும்பாலானோர் குறிப்பாக  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  இவ்வழியாகத்தான் மாணவர்களை பெற்றோர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும், பள்ளி வாகனங்களும் கடந்து சென்று வருகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகள் நேர்ந்து கொண்டே தான் இருக்கின்றன, பெரும்பாலான அரசு அலுவலர்கள்  அரசு ஊழியர்களும், அரசு அதிகாரிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இவ்வழியாக அன்றாடம் பலமுறை கடந்து சென்று வருகின்றனர். 


ஆகவே அந்தப் பகுதியில் உள்ள குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்து தரவேண்டும் என்று புதுச்சேரி இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி   நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார் மேலும் விழுப்புரம் ரயில்வே மேல் அதிகாரியிடமும் தொலைபேசியில் இதுகுறித்து விரிவாக விசாரித்தார் மேலும், கடலூர் சாலையில் குண்டு குழியுமாக கிடந்த ரயில்வே லைன்  சாலையை சரி செய்து கொடுத்தது போல ரயில்வே லைன் 46 மற்றும் 47 சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். 


உடன் அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, நேதாஜி நகர் 1, 2 மற்றும் 3 கிளைச் செயலாளர்கள் காதத்தலிங்கம், செல்வம் மற்றும் ராகேஷ், கழக சகோதரர்கள் அனைவரும் உடன் இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad