புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலை மற்றும் பூங்காவை சீரமைத்தும், டாக்டர் அம்பேத்கர் சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பொதுப்பணி துறை செயற்பொறியாளரை நேரில் சென்று சந்தித்து மனு அளித்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 ஜூன், 2023

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலை மற்றும் பூங்காவை சீரமைத்தும், டாக்டர் அம்பேத்கர் சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பொதுப்பணி துறை செயற்பொறியாளரை நேரில் சென்று சந்தித்து மனு அளித்தார்.


புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலை மற்றும் பூங்காவை சீரமைத்தும், டாக்டர் அம்பேத்கர் சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து புதுச்சேரி மாநில திமுக துணை அமைப்பாளரும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி   அவர்கள் பொதுப்பணி துறை செயற்பொறியாளரை நேரில் சென்று சந்தித்து மனு அளித்தார்.


புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நகராட்சி செயற்பொறியாளர் உமாபாரதி யிடம் மனு அளித்தார் அம்மனுவில் கூறியிருப்பதாவது  தொகுதியில் இருக்கும்  டாக்டர் அம்பேத்கர் சிலை ,நீர்வீழ்ச்சி செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பூங்காவில்  மரங்கள் மற்றும்  செடிகள் வைத்து பூக்கள் பூத்துக் குலுங்கி சுற்றுலா பயணிகள் மனம் கவரும் வண்ணம் அலங்கரித்து பராமரித்து தரவேண்டும் என்றும் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை யை விரிவாக்கம் செய்து சீரமைத்து அத்துடன் எல் வடிவ யூ வடிவ வாய்க்கால்களை புரமைத்து பணிகளை மேற்கொள்ளுங்கள் வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கையின் அடிப்படையில்  அதிகாரிகள் இன்று டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள அம்பேத்கர் பூங்காவினையும், சாலைகளையும், வாய்க்கால்களையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சாலைகளை விரிவு செய்து அவசியமில்லாத பா_வடிவ வாய்க்கால்களை எல்_வடிவ வாய்க்காலாக மாற்றியமைத்தும், பூங்காவினை முழுமையாக புனரமைத்து கொடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி* அவர்களிடம்  அதிகாரிகள் உறுதியளித்தனர்.


டாக்டர் அம்பேத்கர் சாலை வழியினை பொதுவாக வி.ஐ.பி சாலையாக பெரும்பாலும் கருதப்படுகிறது, அரசு அதிகாரிகளிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு நடத்துபவர்கள் வரை அச்சாலைகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர், அத்துடன் புதுச்சேரியில் பிரசிதி பெற்ற பள்ளிகள் அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் என பலவற்றிற்கு அச்சாலையே மைய புள்ளி, ஆகவே இதை மிக விரைவில் பணிகளை துவங்குங்கள் என்று அதிகாரிடம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  அவர்கள் கேட்டுக் கொண்டார். 


உடன்  உதவி பொறியாளர்கள் பார்த்தசாரதி , பன்னீர்* மற்றும் திமுக அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, தொகுதி துணை செயலாளர் ராஜி, நேத்தாஜி நகர் 1, 2 மற்றும் 3 கிளைச் செயலாளர்கள் காத்தலிங்கம் செல்வம் மற்றும் ராகேஷ்,மற்றும் கழக சகோதரர்கள் பாலாஜி, பஸ்கள், ரகுராமன் அனைவரும் உடன் இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad