புதுச்சேரி மாநிலம் உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அங்கன்வாடி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 ஜூன், 2023

புதுச்சேரி மாநிலம் உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அங்கன்வாடி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினார், இந்த சிறப்பு கூட்டத்தில் தொகுதிக்குட்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே உள்ள நல்லுறவை வலுப்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தினார் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வசதிகளையும் அரசிடம் இருந்து நான் பெற்றுத் தருகிறேன் என்றும் உறுதியளித்தார்.


அங்கன்வாடியை புணரமைப்பு, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட ஏற்பாடு செய்து கொடுத்தல் கழிவறை வசதி அனைத்தையும் மிக சுகாதார முறையில் செய்து கொடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உறுதி அளித்தார், உடன் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன்,திமுக மூத்த நிர்வாகி ரவி, தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, துணைத் தொகுதி செயலாளர் ராஜி, மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர் செல்வம் மற்றும் திமுக சகோதரர்கள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தின் போது உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad