ராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NEET பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆலோசனைபடியும் இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி (ம) பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பனப்பாக்கம் ஆகிய இரு மையங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இம்மையங்கங்களில் NEET பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5% இடஒதுக்கீட்டில் 12 மாணவர்கள் MBBS படிப்பிற்கும், 4 மாணவர்கள் BDS படிப்பிற்கும் மொத்தம் 16 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு அரசுப் பள்ளிகளில் 9 மாணவர்கள் MBBS படிப்பிற்கும், 2 மாணவர்கள் BDS படிப்பிற்கும் மொத்தம் 1 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு சேர்க்கை பெற்ற நிலையில் இந்த ஆண்டு 8 மாணவர்கள், 8 மாணவிகள் என மொத்தம் பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
16 மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 31.07.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் புத்தகங்கள் வழங்கி பராட்டினார், உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா மற்றும் மாவட்ட போட்டித்தேர்வு ஒருங்கிணைப்பாளர் திரு. கி. பழனி பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக