செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் மாணவ மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது ஒன்றிய சேர்மன் டி அரசு திருக்கழுக்குன்றம் பேரூர் தலைவர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி மற்றும் முன்னாள் எம் எல் ஏ வீ தமிழ்மணி ஆகியோர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் 627 பேருக்கு விலை இல்லா மிதி வண்டியினை வழங்கி சிறப்புரை ஆற்றினர் மாணவ மாணவியரிடையே பேசிய எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி கல்வியின் முதற்படிக்கட்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அதில் நீங்கள் கவனம் செலுத்தி நன்கு பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் அரசு வழங்குகின்ற மிதிவண்டியினை உங்களின் பயன்பாட்டிற்கு வைத்து பயன் பெற வேண்டும் என்றதும் அரசு பள்ளியில் பல்வேறு முன் எடுப்பு பணிகளை தமிழக முதல்வர் செய்து வருகிறார் ஆகவே மாணவ மாணவிகள் நன்கு பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும் என பேசினார்.
இதில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் ஒன்றிய துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆர் கே ரமேஷ் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர் சுகுமார் திமுக தலைமை பொது குழு உறுப்பினர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் தனசேகர் நகர் செந்தில் ரெயின்போ செல்வகுமார் எம் கே தினேஷ் மோகன்ராஜ் ஜெகதீஷ் உள்ளிட்டோருடன் ஆசிரிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக