ஸ்ரீ மாரியம்மன் திருவிழா நடத்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

ஸ்ரீ மாரியம்மன் திருவிழா நடத்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டாா்மடுகு கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார். இதில் சேம் பள்ளி கிராம நிர்வாக அலுவலர் செந்தில் கிராமிய உதவி ஆய்வாளர் கோடீஸ்வரன் கிராம உதவியாளர் தேன்மொழி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இரு தரப்பினர்களும் கலந்து ஆலோசித்து சட்ட ஒழுங்கு பிரச்சனை பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மாரியம்மன் திருவிழா நடத்த பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர்  கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad