ஆற்றில் மணல் கொள்ளை தடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

ஆற்றில் மணல் கொள்ளை தடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம் கவுண்டமணி மகாநதி ஆற்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மணல் மற்றும் மண் கொள்ளை குறித்து வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இன்று மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்குமார் தலைமையில் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மேலும் வட்டாச்சியர் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற் பொறியாளர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோருக்கு மண், மணல் கடத்தலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர் மீதும்,மண் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் ,கடத்தப்பட்ட மண் மணல் மதிப்பிட செய்து அந்த பணத்தை தமிழக அரசு வசூலித்து அரசு கணக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது. 


இதில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் மாவட்ட அமைப்பு செயலாளர் பாலாஜி பாபு யாதவ், வன்னியர் சங்க செயலாளர் பாபு,மாவட்ட துணை தலைவர் கோபி, ஒன்றிய செயலாளர்கள் காமராஜ், அரவிந்தன், இளம்பருதி, காந்தி, இராமலிங்கம், முருகன், மாவட்ட பொறுப்பாளர்கள் குணசீலன் கோபி அன்பரசு முரளி பூபதி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் குமரேசன், அசோகன், ரமேஷ் நாயுடு, முன்னாள் மாவட்ட செயலாளர் ரவி நகர செயலாளர்கள் ரமேஷ் முதலியார், முகமது பாஷா, குமார் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad