திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலில் நான்காவது பெட்டியில் மின்சார வசதி இல்லை. அதிகாரிகள் அலட்சியம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலில் நான்காவது பெட்டியில் மின்சார வசதி இல்லை. அதிகாரிகள் அலட்சியம்.


திருநெல்வேலி, வண்டி எண் 06677 திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலானது மாலை 6:50 க்கு திருநெல்வேலி சந்திப்பு நிலையத்திலிருந்து புறப்படும். 



இன்று 18.08.2023 மாலை வழக்கம் போல் புறப்பட தயாராக இருந்த நிலையில் நான்காவது (நீல நிற) பெட்டியில் மின்சார வசதி இல்லை, இதனால் மின் விளக்குகள், மின் விசிறிகள் இயங்கவில்லை. மேற்படி பெட்டியில் ஆண்கள் பெண்கள் என சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ய தயாராக இருந்தனர். ஆயினும் வண்டி புறப்படும் வரை மின்சார வசதி செய்யப்படவில்லை. 


சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை, திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தில் மகாராஜன் என்ற எலக்ட்ரிகல் துறையைச் சேர்ந்தவர் சரி செய்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் வண்டி புறப்படும் வரை அவர் அந்த பணியை செய்யவில்லை. மேலும் இதுகுறித்து ரயில்வே போலீசார் அந்த பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளையும் வண்டியில் இருந்து இறங்க வைத்து மாற்று பெட்டிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.


இதனால் 10 நிமிடம் தாமதமாக வண்டி புறப்பட்டது. ரயில்வே துறையின் அலட்சியமான பதிலாலும், அக்கரையில்லா பணிகளாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தென் தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்வதுடன் வருவாய் ஈட்டுவதில் மேலான இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad