தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் ரோட்டில் ஆதவா அறக்கட்டளைக்குச் சொந்தமான பால்பண்ணை உள்ளது. பால் பண்ணையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்காக கட்டு கட்டாக வைக்கோல் வாங்கி இருப்பு வைத்துள்ளனா். இந்நிலையில் நேற்று மாலை வைக்கோல் வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து பால்பண்ணையில் உள்ள பணியாளா்கள் சென்று பாா்த்த போது தீ பற்றி எரியத் தொடங்கியது.
மாலையில் ஆடி மாத காற்று அதிகமாக வீசிக் கொண்டிருந்ததால் வைக்கோல் கட்டுகள் இருந்த இடம் முழுமையும் தீ பற்றி எரியத் தொடங்கின. இதில் சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமடைந்தன. மேலும், வளா்ப்பு பிராணிகளும் தீயில் கருகி இறந்துள்ளன. சம்பவம் குறித்து தகவலறிந்த சாகுபுரம் டி சி டபிள்யூ மற்றும் திருச்செந்தூா் தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இரவு வரை தீ கட்டுக்குள் வராததால் தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக