காரியாபட்டி சி.இ.ஓ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு இரத்ததான முகாம்-ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

காரியாபட்டி சி.இ.ஓ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு இரத்ததான முகாம்-ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உள்ள இரத்தம் வங்கிகளில் இரத்தம் தட்டுப்பாடு அதிகரித்து வந்த நிலையில் பல்வேறு சிகிச்சைகளுக்கு குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், விபத்தில் காயம் அடைந்தோர், போன்றவர்களுக்கு இரத்தம் அதிகம் தேவைப்பட்டதால் மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டது. 


இதனை கருத்தில் கொண்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சி.இ.ஓ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.


இந்த முகாமினை, கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் சந்தோஷ், அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் அண்ணாதுரை, கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் இந்த இரத்ததான முகாமினை துவக்கி வைத்தனர்.


இந்த சிறப்பு ரத்ததான முகாமில், கல்லூரி மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்தனர். அவர்களுக்கு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad