புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது.


இந்நிகழ்வில் பொன்னமராவதி ஷைன் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் ஷைன் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் திரு. கார்த்திக் அவர்கள் தலைமையில் நிலைய மருத்துவர் சிவகலை, எம்பிபிஎஸ் அவர்கள் முன்னிலையில்  வழங்கபட்டது.


இவ்விழாவில் செயலர் சுரேஷ் பொருளர் முகமது யாசின் மேனாள் தலைவர் ரவிச்சந்திரன் மேனாள் செயலர் சுந்தரமூர்த்தி உறுப்பினர்கள் சாமிநாதன் சண்முகம்  மருந்தாளுனர் கருப்பையா பகுதி சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி நிலைய செவிலியர் தீபா கிராம சுகாதார செவிலியர்கள் இடைநிலை செவிலியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிலைய மருத்துவர் சிவகலை எம்பிபிஎஸ் அவர்கள் தாய்ப்பாலில் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பகுதி சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி அவர்கள் கர்ப்பிணிகள் பதிவு செய்தல் பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் சிக்கலான பிரசவங்களை தவிர்க்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்  நிலைய சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் நிகழ்ச்சினை ஏற்பாடு செய்து வரவேற்புரை வழங்க தாய்ப்பால் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றபின் ஷைன் லயன்ஸ் சங்க பொருளர் முகமது யாசின் நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது.


-எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad