போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 11,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 11,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 11,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு - இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.



தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 15 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகிழம்புரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுடலைமணி (35) என்பவரை தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய தட்டப்பாறை காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர்கள் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், வனிதா ராணி மற்றும் சாந்தகுமாரி புலன் விசாரணை செய்து கடந்த 11.05.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.


இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இன்று (28.08.2023) குற்றவாளியான சுடலைமணி என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 11,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தட்டப்பாறை காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர்,வனிதா ராணி, சாந்தகுமாரி ஆகியோரையும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் கலா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad