நீலகிரி பந்தலூர் தாலூக்காவிற்கு உட்பட்ட காரக்கொல்லி பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை வனத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்..
பந்தலூர் தாலூக்காவிற்குட்பட்ட அய்யன்கொல்லி அடுத்துள்ள காரக்கொல்லி பகுதியில் குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நீலகிரி மாவட்டம்,பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லி பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அந்த குடியிருப்புகளை நேற்று தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகள் அமைச்சரிடம் கூறுகையில் மொத்தம் 152 குடியிருப்புகள் உள்ளது இதில் தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீயில் பணிப்புரிந்து ஓய்வு பெறும் தொழிலாளர்கள் குடியிருப்பதற்கு வீடுகளை கொடுப்பதற்கு சேரங்கோடு, சேரம்பாடி,நெல்லியாளம், பாண்டியார் ஆகிய கோட்டங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் விருப்பம் கேட்டபோது பெரும்பாலான தொழிலாளர்கள் விருப்பம் தெரிவிக்காமல் இருப்பதாக தெரிவித்தனர்..
அமைச்சர் கூறுகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி வருகிறார்.பணி ஓய்வு பெறும் டேன்டீ தொழிலாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.தொழிலாளர்கள் கூறுகையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் போதிய வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது எங்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா கொடுத்து தனித்தனியாக குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கவேண்டும் என்றனர்.
ஆய்வின்போது முன்னால் எம்எல்ஏ திராவிடமணி,மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் ,டேன்டீ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பொறுப்பு வெங்கடேஷ், பொது மேலாளர் அசோக்குமார், கூடலூர் டிஎப்ஓ கொம்மு ஓம்காரம்,கோட்ட மேலாளர்கள் ஸ்ரீதரன்,சிவக்குமார், புஸ்பராணி,கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்றதலைவர் பொன்தோஸ் .உதவியாளர் தம்பு,டேன்டீ தொழிற்சங்க தலைவர்கள் சுப்பிரமணியம்,மாடசாமி மற்றும் வனத்துறை அதிகாரிகள் துறை சார்ந்த அலுவளர்கள் உடனிருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக