கோவில்பட்டி முன்விரோதம் காரணமாக செல்போனை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 2 பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

கோவில்பட்டி முன்விரோதம் காரணமாக செல்போனை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 2 பேர் கைது.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் மகன் வீரமணிராஜ் (24) என்பவருக்கும் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த சண்முகராஜ் மகன் சரவணகுமார் (29) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக நேற்று (28.08.2023) வீரமணிராஜ் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்லறை தோட்டம் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மேற்படி சரவணகுமார் மற்றும் அவரது நண்பரான ஆலம்பட்டி, சாலைப்புதூர் பகுதியை சேர்ந்த பெருமாள்சாமி மகன் கண்ணன் (26) ஆகிய 2 பேரும் சேர்ந்து வீரமணிராஜிடம் தகராறு செய்து அவரிடமிருந்து செல்போனை பறித்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.


இதுகுறித்து மேற்படி வீரமணிராஜ் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரிகளான சரவணகுமார் மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட சரவணகுமார் மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகளும், கண்ணன் மீது கொலை மிரட்டல் வழக்கு உட்பட 5 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad