அணைக்கட்டு அருகே கோயில் ஊர்வலத்தில் தகராறில் கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் பலி 4 பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

அணைக்கட்டு அருகே கோயில் ஊர்வலத்தில் தகராறில் கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் பலி 4 பேர் கைது.

அணைக்கட்டு மாரியம்மன் கோயில் திருவிழாவில் நடனம் ஆடும் போது ஏற்பட்ட தகராறில் இரண்டு பேருக்கு கத்திகுத்து நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்தார் .மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த சின்ன ஊணை கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கரக ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது 23) இவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெற்று வருகிறார் மற்றும் அவரது நண்பர் தீபன் (வயது 28) ஆகியோர் நண்பர்களுடன் கரகத்தின் முன்பாக நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.


இதில் அதே ஊரை சேர்ந்த புருசோத்தமனின் எதிர் வீட்டைசேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன்கள் பாலகணேசன், பாபு (எ) யோகானந்தன், ஸ்ரீநாத்..முனுசாமி, சுமன். ஆகியோர்களுக்கும் நடனம் ஆடும்போது கால் மிதித்ததில் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது. அப்போ து இருதரப்பினரும் ஒருவரையொருவர் மாறி, மாறிதாக்கி கொண்டுள்ளனர். 


இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி என்பவரின் மகன்கள்  வீட்டிற்க்கு சென்று கத்தி எடுத்து வந்து புருஷோத்தமன் மற்றும் தீபன் ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் புருஷோத்தமன் என்பவரின் நெஞ்சுப் பகுதியில் ஆழமாக குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் பரிசோதித்து புருஷோத்தமன் வரும் வழியிலே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.


மேலும் தீபன் என்பவருக்கு இடது பக்க முதுகில் கத்தி குத்தியதால் படுகாயம் ஏற்பட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இன்னிலையில் 5 பேர் தப்பியோடிய நிலையில் இரவு முழுவது தீவிரமாக தேடிய போலிசார் பாலகணேசன், பாபு, ஸ்ரீநாத், முனிசாமி ஆகிய 4 பேரை அணைக்கட்டு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மீதமுள்ள 1 ஒருவரை வேலூர் துணை சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் அணைக்கட்டு இன்ஸ்பெக்டர்கருணாகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


கரக ஊர்வலத்தின் போது ஏற்ப்பட்ட வாய் தகராறால் கத்திக்குத்து நடந்து ஒருவர் பலியாகி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad