தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முத்துராஜா (29) என்பவர் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 23.07.2023 அன்று இவரது கடையை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ரூபாய் 1,50,000/- பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து முத்துராஜா அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், விளாத்திகுளம் பல்லாக்குளம் பகுதியைச் சேர்ந்த சீகன் மகன் சுதாகர் (27) என்பவர் மேற்படி முத்துராஜாவின் கடைக்குள் புகுந்து கதவை உடைத்து ரூபாய் 1,50,000/- பணத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரபாண்டியன் சுதாகரை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக