நீலகிரி மாவட்டத்தில் கனரா பேங்க் முன்னால் கழிவு நீர் ஓடை துர்நாற்றத்தால் மூச்சை அடைக்க வைக்கிறது... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டத்தில் கனரா பேங்க் முன்னால் கழிவு நீர் ஓடை துர்நாற்றத்தால் மூச்சை அடைக்க வைக்கிறது...

 


கனரா பேங்க் முன்னால் கழிவு நீர் ஓடை துர்நாற்றத்தால் மூச்சை அடைக்க வைக்கிறது 

நீலகிரி மாவட்டம் உதகையின் மைய பகுதியான சேரிங்கிராஸ் கோத்தகிரி சாலை சஞ்சய் ஓட்டல் பகுதியில் கடந்த பல மாதங்களாகவே கழிவு நீர் சலையில் ஓடை போல் ஓடுகிறது


பல முறை புகார் அளித்தும் பயன் இல்லை என அனைத்து தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர்


இந்த பகுதியில் உணவகம், அசைவ கடைகள்,வங்கி என அனைத்தும் செயல்பட்டு வரும் நிலையில் இப்படி ஒரு சுகாதார சீர்கேடு அனைத்து தரப்பினரையும் அதிருப்தியில் உள்ளனர் 


தொடர்ந்து பல மாதங்களாக கழிவு நீர் ஓடையாக ஓடுவதால் மூக்கை பொத்திகொண்டே வியாபாரம் செய்யும் நிலை தொடர்கிறது 


புதிது புதிதாக பல்வேறு நோய்கள் பரவி வரும் இந்த சூழலில் இப்படி பல மாதங்களாக கழிவு நீர் ஓடை போல் ஓடி தேங்கி நின்றால் இந்த பகுதி வியாபாரிகளுக்கு எப்படி இருக்கும் 


நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதை சீர் செய்து தர அனைத்து தரப்பினரும் அதிருப்தியுடன் கோரிக்கை விடுத்துள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/