20 ஆண்டுகளுக்கு மேல் போடப்பட்ட சிமெண்ட் சாலை மற்றும் தார் சாலையை புதிதாக அமைக்க தையல்குணாம்பட்டினம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

20 ஆண்டுகளுக்கு மேல் போடப்பட்ட சிமெண்ட் சாலை மற்றும் தார் சாலையை புதிதாக அமைக்க தையல்குணாம்பட்டினம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் தையல் குணாம்பட்டினம்  கிராமத்தில் சுமார் 650 குடும்பங்கள் வசித்து வருகின்றன இப்பகுதியில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.இதனால் அப்பகுதியில் உள்ள தார் சாலை மற்றும் திருக்களில் உள்ள சிமெண்ட் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் வாகன ஓட்டியில் உயிர் காபத்தான சூழ்நிலையில் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.



மேலும் மழைக்காலங்களில் மழை நீரானது குளம் குட்டை போல் காட்சி அளிக்கின்றன இதனால் கொசுக்கள் உற்பத்தி  அதிகமாகியும்,விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வருவதாகவும் மழைக் காலங்களில் சாக்கடை நீரும் தேங்கியிருப்பதால் சுகாதாரமற்ற வாழ்க்கை வாழ்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.எனவே அப்பகுதியில் சாலை வசதிகளும் சிமெண்ட் சாலையும் அமைத்து தர வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் , ஊராட்சி செயலர்  கவுன்சிலர்,சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற  உறுப்பினர்  ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.


- குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad