தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளும் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் விவசாயிகள் மேளா 24.08.2023 அன்று நடைபெற உள்ளது.
இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையும் பொருட்டு 24.08.2023 அன்று திட்டமிடப்பட்டிருந்த 'விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" 31.08.2023 அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 'முத்து அரங்கத்தில்" வைத்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக