இராணிப்பேட்டை முத்து கடை பஸ் நிலையம் அருகில் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை விட்டனர், இதில் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ஜோசப் கனஅடி, தோழர் பாபு, தேவராஜ், லியோ பால், நாராயணமூர்த்தி 70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்கு புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்து, குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850, சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் ஊராட்சி செயலாளர்கள் வனத்துறை தொகுப்பு ஊதிய ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவு தொகை வழங்காமல் இருக்கும் அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக செலவுத்தொகை வழங்கி மனுக்களின் நிலவரத்தை தெரிந்து கொள்ள ட்ராக்கிங் சிஸ்டத்தை உருவாக்கு என 70-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் முடிவில் தயாளன் நன்றி கூறினார்.
- செய்தியாளர் சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக