எங்கள் மழையூர் ஊரில் 473 குடும்ப அட்டை உள்ளது இதில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர் ஆனால் எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் ராணி ராமமூர்த்தி அவர்கள் அவர்களுக்கு வேண்டப்பட்ட 33 நபர்களை மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் சேர்த்துள்ளார் இதை நாங்கள் கேட்டு பஞ்சாயத்து ஆபீஸிடம் சென்று கேட்டால் அவர் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் கேட்டுக் கொள்ளுங்கள் மனு கொடுங்கள் எங்களுக்கு பயமில்லை என்று பஞ்சாயத்து செயலாளர் ராமன் அவர்களும் பஞ்சாயத்து தலைவர் ராணி ராமமூர்த்தி அவர்களும் சொன்னார்கள் நாங்கள் அதன்பிறகு திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டார வள மையம் அலுவலகத்தை சென்று அங்குள்ள அதிகாரியை கேட்டோம் அவர்களும் எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்றும் உங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவரும் பஞ்சாயத்து செயலாளர் அவர்களும் எங்களுக்கு கணக்கு கொடுத்தனர் அதை நாங்கள் பி.டி.ஓ .விடம் கொடுத்து கணக்கு ஏற்றி விட்டோம் எங்களுக்கு தெரியாது என்று கூறினர் அதனால் நாங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சென்று 52 மனுக்கள் கொடுத்துள்ளோம் இதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறினார்.
- செய்தியாளர் சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக