நாரைக்கிணறு - டிராக்டரில் சரள் மணல் கடத்திய 2 பேர் கைது, ஜேசிபி மற்றும் டிராக்டர் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

நாரைக்கிணறு - டிராக்டரில் சரள் மணல் கடத்திய 2 பேர் கைது, ஜேசிபி மற்றும் டிராக்டர் பறிமுதல்.

நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி டிராக்டரில் சரள் மணல் கடத்திய 2 பேர் கைது - 1 யூனிட் சரள் மணல், ஜேசிபி இயந்திரம் மற்றும் மணல் கடத்துசவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல்.


நாரைக்கிணறு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கோகிலா தலைமையில் உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று (01.08.2023) நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லங்கிணறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள குளத்துப் பகுதியில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் உரிய அனுமதியிமின்றி டிராக்டரில் சரள் மணல் கடத்தியது தெரியவந்தது.


இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த ஜேசிபி இயந்திரத்தின் ஓட்டுனரான இலவேலங்கால் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சுபாஷ் (எ) சுபாஷ் சந்திர போஸ் (25) மற்றும் டிராக்டர் ஓட்டுனரான கொல்லங்கிணறு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் செந்தில்குமார் (40) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 யூனிட் சரள் மணல், ஜேசிபி இயந்திரம் மற்றும் மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நாரைக்கிணறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad