உதகை அடுத்த கூடலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

உதகை அடுத்த கூடலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

 


கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் குடிமக்கள். நுகர்வோர் மன்றம் மற்றும் போதை விழிப்புணர்வு மன்றம் ஆகியன மூலம் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  பள்ளி தலைமை ஆசிரியர் குளோரா புளோரி தலைமை தாங்கினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மணிவாசகம்  முன்னிலை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது போதை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில் மாணவர்கள் பாதிக்க பட கூடாது என்பதற்காக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் முதலில் கல்லீரல் சிறுநீரகம் இதயம் நுரையீரல் பாதிக்கப்படுவதோடு, பசியின்மை,  உடலில் சத்துக்கள் குறைபாடுகள் காரணமாக நினைவுத்திறன் குறைபாடுகள் மூளை செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுகிறது பலருக்கும் வாய் நுரையீரல் வயிற்றுப் பகுதி சிறுநீரக புற்றுநோய் என பல்வேறு நோய்களுக்கும் ஆளாகி மிகுந்த சிரமப்படும் சூழல் உள்ளது போதை பழக்கங்களை அடிமையாகுவதை தவிர்க்க மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றார்.  


ஏகன் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் பேசும்போது போதை பொருட்களால் சமூகமே சீரழிகிறது. எனவே மாணவ சமுதாயத்தினர் தாங்கள் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் தவறான சிந்தனைகளை தவிர்க்க முடியும் என்றார். ஆல் த சில்ரான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது மாணவர்கள் அதிகம் பெற்றோர்கள் மூலம் தவறான பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். மாணவ மாணவிகள் தாங்கள் பெற்றோர் போதை பொருட்களில் இருந்து மீள வலியுறுத்த வேண்டும். அதன்மூலம் குடும்ப வளர்ச்சி பெறும் என்றார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad