ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் TRB.ராஜா அவர்களும் இராணிப்பேட்டை சிப்காட்- 3 தொழிற் பேட்டையில் அமைந்துள்ள கோஸ்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் கார்களுக்கு தேவையான எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் தயார் செய்யப்படுவதை பார்வையிட்டு உற்பத்தி முறைகளை கேட்டறிந்தார்கள்.
இதில் மேலாண்மை இயக்குனர் சிப்காட் சுந்தரவல்லி, இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன். சிப்காட் கண்காணிப்பு பொறியாளர் எஸ்.தேவஇரக்கம், இராணிப்பேட்டை சிப்காட் திட்ட அலுவலர் மகேஸ்வரி, கோஸ்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை மேலாளர் ஜெயகுமார் மற்றும் தொழிலதிபர் PRC.ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக