இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், செல்வமந்தை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழா ஊராட்சி மன்ற தலைவர். ஆறுமுகம் அவர்கள் லைமையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான பெ.சுந்தரம்மாள் பெருமாள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் நெமிலி எஸ்.ஜி.சி. பெருமாள், பா.செ.நரசிம்மன், அ.சீனிவாசன், கே. பி.சம்பத், ஆர்.எல்லப்பன், எஸ்.எம்.டி, சதீஷ், ஓபையா, பார்த்திபன், தினகரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக