தூத்துக்குடி, மாவட்டத்தில் சலவைத் தொழில் மேம்படுத்துவதற்கு பவர் லாண்டரி கடை அமைக்க அரசு நிதி ரூ.3 லட்சம் உதவி பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக அமைத்து பவர் லாண்டரி சலவை கடை (Power Laundry unit) புதியதாக அமைக்க ரூ.3.00 லட்சம் அரசு நிதி உதவி பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதிய பவர் லாண்டரி தொடங்குவதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தணைகள் என்னவென்றால் 10 நபர்கள் குழுவாக இணைந்து செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குழுவின் உறுப்பினர்கள் பிவ/மிபிவ/சீ.ம இனத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள ஒவ்வொரு உறுப்பினர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- க்குள் இருக்க வேண்டும்.
சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் MSME (Ministry of Micro small and medium enterprises) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களின் குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
புதிய பவர் லாண்டரி தொடங்க ஆர்வமாக உள்ள சலவைத் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மக்கள், குழுவாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று வருகின்ற 15.09.2023- தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் வருமானச் சான்று, சாதிச்சான்று, குடும்ப அட்டை சான்று மற்றும் ஆதார் அட்டை தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கூடுதல் தகவல்களுக்கு 0461-2341378 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக